SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் ஆங்கில அடிப்படைப் பயிற்சி

ஷா ஆலம்,  ஜூன் 25 – ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சமூக மேம்பாட்டுத் துறை (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்துள்ள அடிப்படை ஆங்கிலப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

மாரா பல்கலைக்கழகத்தின் ஆங்கில கல்வி அகாடமியுடன் (யு.ஐ.டி.எம்.) இணைந்து நடத்தப்படும் இந்தப் பயிற்சியில்  30 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும் என மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் எதிர்வரும் ஜூன் 29 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெறும் மூன்று மாதப் பயிற்சிக்கு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் 20 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பதோடு பயிற்சித் திட்டத்தில்  முழுவதும் முழு அர்ப்பணிப்பை வழங்க வேண்டும்.

இந்தப் படிப்பு ஆங்கிலத்தில் உங்கள் தொடர்புத் திறனை மேம்படுத்த உதவும் என்று மாநகர் மன்றம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், தகவல் மற்றும் பதிவுகளுக்கு  https://shorturl.at/YPCAw என்ற இணைப்பின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :