SELANGOR

இவ்வார இறுதியில் 17 செகி ஃப்ரெஷ் கிளைகளில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 25: இவ்வார இறுதியில் 17 செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி கிளைகளில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து எஹ்சான் ரஹ்மா விற்பனை  நடைபெறும்.

சனிக்கிழமை அன்று கோம்பாக், காயு அரா, பெக்கான் சலாக், பூலாவ் இண்டா, சுங்கை பெசார், சுங்கை துவா, தஞ்சோங் காராங் மற்றும் தாமான் புத்ரா பெர்டானா ஆகிய செகி ஃப்ரெஷ் கிளைகளில் மலிவு விற்பனை நடைபெறும்.

அதனை தொடர்ந்து, மாறுநாள் ஞாயிறு அன்று அம்பாங், பத்து கேவ்ஸ், பண்டார் மக்கோத்தா, ஜெர்னாங் ஜெயா, காஜாங், கோல குபு பாரு, சுபாங், செளஜானா உத்தாமா மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய செகி ஃப்ரெஷ் கிளைகளில் மலிவு விற்பனை நடைபெறும்

“பிகேபிஎஸ் உடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்குக் குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

“செகி ஃப்ரெஷில் மலிவான மற்றும் தரமான அடிப்படைத் தேவைகளைப் பெறுங்கள்”.

இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ள 2,850 இடங்களில் ஏற்பாடு செய்த மலிவு விற்பனை திட்டத்திற்குச் சிலாங்கூர் அரசாங்கம் RM40 மில்லியன் மானியங்களைச் செலவிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதோடு, உள்ளூர்வாசிகளுக்கு அதன் வரம்பை விரிவு படுத்துவதற்காகச் செகி ஃப்ரெஷ் உடன் பிகேபிஎஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

மலிவு விற்பனையின் சமீபத்திய இருப்பிடத்தை பிகேபிஎஸ் முகநூலில் அல்லது விற்பனை போஸ்டர் அல்லது linktr.ee/myPKPS இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Pengarang :