NATIONAL

தகுதியுள்ளத் தரப்பினர் விடுபடாலிருக்க டீசல் இலக்கு மானியத் திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன் 27- டீசல் இலக்கு மானியத் திட்ட அமலாக்கத்தை
அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்பதோடு அவசியம்
ஏற்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கைகள்
அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு கூறியது.

வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பினால் சாவல்கள் ஏற்பட்டுள்ள சூழலில்
உண்மையில் உதவித் தேவைப்படுவோரின் நலன் காக்கப்படுவதை
நிதியமைச்சு தொடர்ந்து உறுதி செய்து வரும் என்று அது தெரிவித்தது.

மக்களின் வாழ்க்கைச் செலவின தாக்கத்தை குறைப்பதற்காகப் பூடி மடாணி
எனப்படும் மடாணி மானிய உதவித் திட்டத்தின் வழி போக்குவரத்து
துறையினர் டீசல் வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்கள், சிறு
விவசாயிகள், சிறுதோட்டக்காரர்களுக்கு அரசாங்கம் இலக்கு மானியத்தை
அமல்படுத்தி வருகிறது.

இந்த உதவித் தொகை மறுசீரமைப்பு செயல்முறையின் அமலாக்கம்
விரிவான ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம்,
நடப்புத் தொழில் துறையின் நடவடிக்கைச் செலவினம்
அதிகரிக்கடாமலிருப்பதை உறுதி செய்வது அவசியம் என்பதோடு
பொருளாதாரத்திற்கு திடீர் தாக்கம் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய
இதன் அமலாக்கம் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று
அமைச்சு குறிப்பிட்டது.

அமலாக்கம் பொருத்தமானதாகவும் அமல்படுத்தப்படுவதற்கு ஏற்றதாகவும்
இருக்கும் அதே சமயம், மக்களின் வாழ்க்கைச் செலவினம்
பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின முக்கிய
இலக்காக இருந்து வரும் என்று மக்களவையில் இன்று வழங்கிய
எழுத்துப்பூர்வப் பதிலில் அது தெரிவித்தது.


Pengarang :