MEDIA STATEMENTNATIONAL

எம்பிஎஸ்ஏ செக்சன் 6 ன்  நவீன சந்தையின் பராமரிப்புச் செலவு 20,000 யை  மாநகரம்  ஏற்கிறது

ஷா ஆலம், ஜூன் 27: வாடிக்கையாளர்களின் வசதிக்காக இங்குள்ள செக்‌ஷன் 6 நவீன சந்தையின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட மாதம் 20,000 ரிங்கிட்டை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) செலவழிக்கிறது.

சந்தையின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு அம்சங்களை  தொடர்ந்து, மேம்படுத்துவதற்காக வாடகைக் கட்டணத்தை அதிகரிக்க தனது தரப்பு முன்மொழிந்ததாக டத்தோ பண்டார் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“கடந்த ஆண்டு ஆய்வின் அடிப்படையில், பெறப்பட்ட வாடகை விகிதத்துடன் ஒப்பிடுகையில், நாங்கள் செலவழித் தொகை அதிகம். அதுமட்டுமில்லாமல், எம்பிஎஸ்ஏ வழங்கும் சராசரி மானியம் மாதத்திற்கு RM20,000 ஆகும்.

“நேற்று நாங்கள் 93 வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் அமர்வை நடத்தினோம். மேலும், புதிய வாடகை விகிதத்தை 60 சதவிகிதம் அதிகரிக்க முன்மொழிந்தோம்,” என்று அவர் முழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.

இருப்பினும் வர்த்தகர்களிடமிருந்து ஆட்சேபனைகள் இருப்பதாக முகமட் ஃபௌசி கூறினார். எனவே, கட்டண உயர்வை சற்று குறைக்க வேண்டும் என வணிகர்களின் பரிந்துரையை தனது தரப்பு ஆய்வு செய்யும்.

“இந்த அதிகரிப்பு விகிதம் நீண்ட காலமாக ஆய்வு செய்யப்படவில்லை. உண்மையில் இந்த 60 சதவீத முன்மொழிவு எங்களுக்கு எந்த இலாபத்தையும் தரவில்லை. ஆனால் இது அதிக மூலதனத்தைப் பெற்று தரும்.

உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் வசதிக்காக வர்த்தகர்கள் சிறந்த சேவை மற்றும் வணிக இடத்தைப் பெறுவதை நான் உறுதி செய்வேன்,” என்று அவர் கூறினார்


Pengarang :