NATIONAL

எம்.எஃப்.எல். வாரியத்தின் முடிவுக்கு எதிராக சிலாங்கூர் எஃப்.சி. மேல் முறையீடு செய்யும்

கோலாலம்பூர், ஜூன் 28- மலேசியா கால்பந்து லீக் (எம்.எஃப்.எல்.) வாரிய
இயக்குநர்களின் திருத்தியமைக்கப்பட்ட முடிவுக்கு எதிராக சிலாங்கூர்
எஃப்.சி. மேல் முறையீடு செய்யும்.

கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஜோகூர், சுல்தான் இப்ராஹிம் அரங்கில்
நடைபெற்ற ஜோகூர் டாருள் தாக்ஸிம் குழுவுக்கு எதிரான ஷேரிட்டி
ஷீல்ட் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியது தொடர்பில்
எம்.எஃப்.எல். எடுத்துள்ள திருத்தியமைக்கப்பட்ட முடிவினை தாங்கள்
கவனத்தில் கொண்டுள்ளதாக சிலாங்கூர் கால்பந்து கிளப் கூறியது.

இருப்பினும் இதன் தொடர்பில் எம்.எஃப்.எல்.லிடம் தாங்கள் இன்னும் மேல்
முறையீடு செய்யவில்லை என்று அது தெரிவித்தது.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
அவர்களின் உத்தரவுக்கு இணங்கும் வகையிலும் மதிப்பளிக்கும்
விதமாகவும் சிலாங்கூர் குழுவுக்கு எதிராக ஏற்கனவே எடுத்த முடிவை
தங்களின் விருப்புரிமையைப் பயன்படுத்தி மறுஆய்வு செய்வதாக
எம்.எஃப்.எல். இயக்குநர் வாரியம் முன்னதாகக் கூறியிருந்தது.

இந்த மறுஆய்வின்படி சிலாங்கூர் குழுவுக்கு விதிக்கப்பட்ட 100,000 வெள்ளி
அபராதம் 60,000 வெள்ளியாகக் குறைக்கப்பட்டது. அதே சமயம்,
அக்குழுவுக்கு மூன்று புள்ளிகளைக் குறைக்கும் முடிவையும் அது ரத்து
செய்தது.

மேலும், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் ஜோகூர் டாருள்
தாக்ஸிம் குழுவுக்கு எதிராக சிலாங்கூர் அணி ரசிகர்கள் இன்றி ஆட
வேண்டும் என்ற நிபந்தனையையும் அது தளர்த்தியது.


Pengarang :