NATIONAL

சிலாங்கூர் எஃப்சிக்கு விதித்த மூன்று-புள்ளிகள் கழிப்பு ரத்து

ஷா ஆலம், ஜூன் 28: 2024-2025 சூப்பர் லீக் போட்டியில் சிலாங்கூர் எஃப்சிக்கு விதித்த மூன்று-புள்ளிக் கழிப்பை ரத்து செய்ய மலேசியன் கால்பந்து லீக்கின் தலைமை குழு உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் கருத்தை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தலைமை குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர் என மலேசியா கால்பந்து லீக் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழக அரங்கில் சிலாங்கூர் எஃப்சி மற்றும் ஜேடிடி பங்கேற்கும் சூப்பர் லீக் போட்டிகளில் பார்வையாளர்கள் கலந்து கொள்வதற்கான தடையையும் மலேசியா கால்பந்து லீக் நீக்கியது.

கூடுதலாகச் சிலாங்கூர் எஃப்சிக்கு விதிக்கப்பட்ட அபராதம் RM100,000 லிருந்து RM60,000 ஆகக் குறைக்கப்பட்டது.

எவ்வாறாயினும்,  ஜேடிடி மற்றும் மலேசியா கால்பந்து லீக் ஆகியவைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை பராமரிக்கப்படுகிறது. ஆனால், தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

“இருப்பினும், சிலாங்கூர் எஃப்சி அதே குற்றத்தை மீண்டும் செய்தால், கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்” என்று அறிக்கை கூறுகிறது.

மே 10 அன்று சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் ஜோகூர் டாருல் தாசிமுக்கு (ஜேடிடி) எதிராக சும்பங்சிஹ் கோப்பை ஆட்டத்தில் விளையாடாததற்காக  ரெட் ஜெயண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மலேசிய கால்பந்து லீக் தெரிவித்துள்ளது.

அந்த குற்றத்திற்காக, சிலாங்கூர் எஃப்சிக்கு RM100,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சூப்பர் லீக் போட்டியில் மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டது.


Pengarang :