SELANGOR

நாளை ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க சிலாங்கூர் வாசிகளுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 28: நாளை பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள சிலாங்கூர்வாசிகள் அழைக்கப் படுகிறார்கள்.

பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வருகையாளருக்கு சமீபத்திய வேலை காலியிடங்களை அறிமுகப்படுத்த முகப்பிடங்களை திறக்க உள்ளதாகச் சிலாங்கூர் தொழிலாளர் பிரிவு (யூபிபிஎஸ்) தெரிவித்தது.

“எதிர்வரும் சனிக்கிழமை அன்று ஜோப்கேர் வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறவுள்ளதாக மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அறிவித்தார்.

“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூகத்தில் வேலை வாய்ப்புகளை பற்றி அறிவிப்பதற்கும் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும்” என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட நாள் முழுவதும் வேலைக்கான நேர்காணல் அமர்வுகளும் நடைபெறும். பணியமர்த்தல் செயல்முறையை விரைவுபடுத்துவது மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள்  உடனடியாக  நேர்காணல்களில்  பங்கு கொண்டு, வேலை வாய்ப்புகளை ஏற்க தயாராக தேவையான அனைத்து  தாஸ்தாவாஜூகளுடனும்  வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், தகவலுக்கு, ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு அவர்களின் அலுவலகத்தை 03-55447305 அல்லது 03-55447307 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :