NATIONAL

ஜோகூர் பாலத்தின் 100வது ஆண்டு நிறைவு- மலேசியாவுடன் உறவை வலுப்படுத்த சிங்கைப் பிரதமர் ஆர்வம்

சிங்கப்பூர், ஜூன் 28 – ஜோகூர் பாலத்தின் (கோஸ்வே) 100வது ஆண்டு நிறைவையொட்டி மலேசியாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் பயன் தரும் திட்டங்களை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

கடந்த 1924ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்ட கோஸ்வே பாலம் கடந்த நூற்றாண்டில் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்பட்டதாக வோங் கூறினார்.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த  இணைப்பையும் எங்கள் உறவுகளையும் வலுப்படுத்த நான் விரும்புகிறேன்.  சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் பல துறைகளில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா கூட்டாக ஈடுபட்டுள்ளன என்று அவர் இன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள  பதிவில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையிலான  உறவு நட்பு மற்றும் பின்னிப்பிணைந்த வரலாற்றின் தனித்துவமிக்க அடையாளச் சின்னமாக காஸ்வே விளங்குகிறது என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.

உலகின் பரபரப்பான தரைக் கடப்பு பாதைகளில்  ஒன்றான கோஸ்வே பல தலைமுறைகளைச் சேர்ந்த   சிங்கப்பூரர்கள் மற்றும் மலேசியர்களுக்கு ஒரு அழியாத நினைவாக உள்ளது என்று அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரும் மலேசியாவும் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண உறுதிபூண்டுள்ளன. ஏனெனில் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுவாகவும்  செழிப்பாகவும் உள்ளது என அவர் சொன்னார்.

ஜோகூர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட காஸ்வேயின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் இன்று காலை கலந்து கொண்டார். மேலும், விழாவை நடத்தியதற்காக ஜோகூர்  துங்கு மக்கோத்தா இஸ்மாயில் மற்றும் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹாபிஸ் காஸி ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :