SELANGOR

இலவச எச்.பி.வி. சோதனை-ஜூலை 13ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 29- கம்போங் துங்கு சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்  பெண்களுக்கான   இலவச மனித பாப்பிலோமா வைரஸ் (எச்.பி.வி.) பரிசோதனை எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியைக்  கண்டறிவதற்கான சோதனை அன்றைய தினம்  காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பெட்டாலிங் ஜெயா  SS3/14 இல் உள்ள மாநகர் மன்ற  பல்நோக்கு மண்டபத்தில் நடைபெறும் என்று  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய் கூறினார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். விரைந்து சோதனை பேற்கொள்ளுங்கள். இது எளிமையானது, வலியற்றது மற்றும் மிகவும் பயன்மிக்கது என்று அவர் தெரிவித்தார்.

“இலவசமாக பரிசோதனையைப் பெறுவோம்” என்று முகநூல் பதிவில் கூறிய அவர், மேலும் பங்கேற்பாளர்கள் கைப்பேசி  மற்றும் அடையாள அட்டைகளைக் உடன் கொண்டு வர வேண்டும்  என நினைவூட்டினார்.

கம்போங் துங்கு தொகுதியின்  மகளிர் திறன் மேம்பாட்டு மையம் (பி.டபள்யூ.பி.) இதர நிறுவனங்களுடன் இணைந்து இந்நிகழ்வுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர்  gle/AKkkS3dVLLZgV9RK6 என்ற இணைப்பின் மூலம்  பதிவு செய்யலாம்.

பங்கேற்பதற்கான நிபந்தனைகள் வருமாறு:

• 30 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்

• குடும்ப வருமானம் வெ.5,000க்கும் குறைவாக இருக்க வேண்டும்

• கர்ப்பிணியாக இருக்கக் கூடாது

• கருப்பை நீக்கம் செய்ததிருக்கக் கூடாது

• கடந்த ஐந்து ஆண்டுகளில எச்.பி.வி. சோதனை செய்யாதவர்களாக இருக்கக் கூடாது


Pengarang :