ANTARABANGSAMEDIA STATEMENT

 பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு சீனப் பிரஜைகள் மரணம்

கோலாலம்பூர், ஜூன் 29: இன்று காலை 11 மணியளவில் கெந்திங் மலையிலிருந்து கீழே செல்லும் பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு சீனப் பிரஜைகள் இறந்தனர் மற்றும் 19 பயணிகள் உயிர் பிழைத்தனர்.

தலையில் ஏற்பட்ட காயங்களால் இருவரும் இறந்தனர் என பகாங் தீயணைப்புத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமட் ஜைடி வான் இசா கூறினார்.

.”இருவரின் உடல்களும் பகாங்கில் உள்ள பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்,” என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

பேருந்தில் 18 சீனப் பிரஜைகள் அடங்கிய 21 பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் இருந்ததாக வான் முகமட் சைடி கூறினார்.

முன்னதாக, சுற்றுலாப் பேருந்து விபத்தைக் காட்டும் 21 வினாடி வீடியோ வைரலானது, பல பாதுகாப்பு பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

 


Pengarang :