ANTARABANGSAMEDIA STATEMENT

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு 30 நாள் கட்டணமில்லா விசா- ஜூலை முதல் தேதி அமல்

கோலாலம்பூர், ஜூன் 30- மலேசியர்கள்,  இ-சுற்றுலா விசாவின் மூலம் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வருவதற்கான புதிய பயணச் சலுகையை  இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை ஓராண்டிற்கு இந்தச் சலுகை அமலில் இருக்கும் என்றும் அது  குறிப்பிடப்பட்டது.

இ-சுற்றுலா விசாக்கள் மற்றும் பிற இ-விசாக்களுக்கான தற்போதைய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி தொடர்ந்து  நடைமுறையில் இருக்கும்.

அவுட்சோர்ஸ் எனப்படும்  சேவை வழங்குநர் (M/s IVS குளோபல் விசா மையம்) மூலமாகவோ அல்லது தூதரகத்திலிருந்து  நேரடியாகவோ பாரம்பரிய காகித விசாக்களை தேர்வு செய்பவர்களுக்கு வழக்கமான விசா கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த இ-சுற்றுலா விசாவிற்கு மலேசியர்கள் இந்தியத் தூதரகத்தின் அகப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள  https://indianvisaonline.gov.in/evisa/tvoa.html  என்ற இணையதளம் வழி விண்ணப்பிக்கலாம்.

புதிய விதிமுறைகளை கொண்ட இந்தியாவுக்கான இ-சுற்றுலா விசாவிற்கு கூடுதல் விசா கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என்பதையும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில்  இ-பிசினஸ், இ-கான்பரன்ஸ், இ-மெடிக்கல், இ-மெடிக்கல் அட்டென்டன்ட், இ-ஆயுஷ், இ-எமர்ஜென்சி எக்ஸ் மற்றும் இதர விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட படி விசா கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :