NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று மாலை 3.00 மணிக்கு போக்குவரத்துக்குத் திறக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 1- சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் ஃபாதர்‘ஸ்
ஆர்கானிக் ஃபார்ம் பொழுதுபோக்கு முகாம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவு
காரணமாகப் போக்குவரத்துக்கு மூடப்பட்ட தடம் பி66 ஜாலான் பத்தாங்
காலி- கெந்திங் சாலை இன்று மறுபடியும் திறக்கப்படவுள்ளது.

பொது மக்கள் இன்று மாலை 3.00 மணி தொடங்கி இச்சாலையைப்
பயன்படுத்தலாம் என்று உலு சிலாங்கூர் மாவட்ட பொதுப்பணி இலாகா
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அப்பகுதி செப்பனிடப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த மே
மாதம் 27 முதல் 29ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டதாக அவ்வறிக்கை
குறிப்பிட்டது.

மோசமான நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகளை
மேற்கொள்வதற்காக அச்சாலை கடந்த 2022 டிசம்பர் மாதம்
போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

கடந்த 2022 டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ந்த அந்த நிலச்சரிவில் 31 பேர்
பலியாகினர்.


Pengarang :