NATIONAL

இன்று முதல் போக்குவரத்து குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணம் அமல்

கோலாலம்பூர், ஜூலை 1: இன்று முதல் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) மற்றும் சட்டம் 333ன் கீழ் அனைத்து துணைச் சட்டங்களின் மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான புதிய அபராதக் கட்டணத்தைக் கோலாலம்பூர் நகர மன்றம் (டிபிகேஎல்) நடைமுறைப் படுத்தவுள்ளது.

அபராதக் கட்டணங்கள் அனைத்தும் வாகனங்களின் வகை மற்றும் அபராதத்தைச் செலுத்த எடுத்து கொள்ளும் காலம்  ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மாறுப் படும் என டிபிகேஎல் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.

மோட்டார் சைக்கிள் வகைக்கான அபராதக் கட்டணம் ஒன்று முதல் 15 நாட்கள் வரை RM30, 16 முதல் 30 நாட்கள் வரை RM50 மற்றும் 31 முதல் 60 நாட்கள் வரை RM80 என டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

கார் வகைக்கு, ஒன்று முதல் 15 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM50, 16 முதல் 30 நாட்களுக்கு RM80 மற்றும் 31 முதல் 60 நாட்களுக்கு RM100 என அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :