NATIONAL

பிங்காஸ் உதவி திட்டத்திற்கான புதிய விண்ணப்ப நிபந்தனை அமல்

ஷா ஆலம், ஜூலை 5: பிங்காஸ் உதவி திட்டத்திற்கான புதிய விண்ணப்ப நிபந்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி RM5,000க்குக் குறைவான குடும்ப வருமானம் பெறும் நபர்களும் இந்த உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

முன்பு RM3,000க்கும் கீழ் மாத வருமானம் பெறும் குடும்பங்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபந்தனை தளர்வால் அதிகமான மக்கள் பலன் அடைவதை உறுதிசெய்ய முடியும்.

ஒரு வருடத்திற்கு RM3,600 வழங்கும் இந்த உதவி திட்டத்திற்கு இன்று முதல் அடுத்த ஆகஸ்ட் 15 வரை செலாங்கா செயலி அல்லது www.bingkaselangor.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“உணவு, மருந்து மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு 24 மாதங்களுக்கு பிங்காஸ் RM300 (1 மாதம்) உதவி வழங்குகிறது.

“இந்தத் திட்டமானது 30,000 பயனாளிகளை இலக்காகக் கொண்டு RM108 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கியது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிங்காஸை மிகப்பெரிய உதவித் திட்டமாக மாற்றுகிறது” என்று இன்று செய்தியாளர் கூட்டத்தில் அன்பால் சாரி கூறினார்.

“விண்ணப்பதாரர்கள் உள்ளூர் குடிமக்களாகவும் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும். கூடுதலாகச், சிலாங்கூரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்க வேண்டும் அல்லது இந்த மாநிலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

“இந்தத் திட்டம் நாட்டின் தீவிர வறுமையை தீர்க்க முடியும் மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) மேக்ரோ குறிகாட்டிகளின் சாதனைக்கு மேலும் பங்களிக்க இயலும்” என்று அவர் கூறினார்.

இந்த உதவிக்கான தொகை பெறுநர்கள் எளிதாகச் செலவழிக்க “வேவ்பே இ-வாலட்“ பயன்பாட்டின் மூலம் விநியோகிக்கப் படுகிறது.


Pengarang :