NATIONAL

மொத்தம் 11,783 உணவு விற்பனை நிலையங்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான வளாகம் என அங்கீகாரம் பெற்றன

தவாவ், ஜூலை 7: நாட்டில் மொத்தம் 11,783 உணவு விற்பனை நிலையங்கள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான வளாகம் (BeSS) அங்கீகாரத்தைப் பெற்றன. மேலும், குபோதா பகுதியில் உள்ள மூன்று வளாகங்களுக்குச் சுத்தமான, புகை இல்லாத வளாக (BeBAs) என்ற அங்கீகாரம் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மட்டால் வழங்கப்பட்டது.

BeSS என்பது மலேசிய சுகாதார அமைச்சகம் (KKM) தூய்மையான மற்றும் பல முக்கிய கூறுகளை கொண்டுள்ள வளாங்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகும்

BeBAs திட்டமானது பல்வேறு அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ பங்காளிகள், தொழில்முறை அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) ஆகியவற்றுடன் உணவு வளாக ஆப்ரேட்டர்களின் ஒத்துழைப்பை உள்ளடக்கியது என முகநூலில் பதிவு மூலம் சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டது.

உணவு சுகாதார விதிமுறைகள் மற்றும் உணவு வளாகங்களில் புகைபிடிப்பதற்கான தடை எப்போதும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதை இந்த திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.

“ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் புகை இல்லாத சூழல் மிகவும் முக்கியமானது மற்றும் 2040 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை புகையில்லா நாடாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்திற்கு ஏற்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த திட்டம் சமூகத்தின், குறிப்பாக உணவு வளாகங்களை நடத்துவோர் மற்றும் வியாபாரிகள், உணவு வளாகங்களின் தூய்மை மற்றும் புகைபிடிப்பதைத் தடைசெய்வதன் முக்கியத்துவம் குறித்து துல்லியமான புரிதலையும் இணக்கத்தை கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புகைபிடிக்கும் பழக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் வெற்றியானது அனைத்துத் தரப்பினர் மற்றும் தனிநபர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது என்றார் அவர்.

உங்கள் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்காது என்றும் அவர் கூறினார்.


Pengarang :