NATIONAL

ஜூன் 24 வரை 36 லட்சம் இ.பி.எஃப். உறுப்பினர்கள் 1,152 கோடி வெள்ளியை நெகிழ்வு கணக்கிற்கு மாற்றினர்

கோலாலம்பூர், ஜூலை 10 – ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.)
ஐம்பத்தைந்துக்கும் குறைவான வயதுடைய 1 கோடியே 30 லட்சத்து 10
ஆயிரம் உறுப்பினர்களில் 27.8 விழுக்காட்டினர் அதாவது ஏறக்குறைய 36
லட்சத்து 10 ஆயிரம் பேர் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை 1,152
கோடி வெள்ளியை தங்களின் நெகிழ்வு கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.

இதனிடையே, 512 கோடி வெள்ளித் தொகை ஓய்வுகாலக் கணக்கிற்கு
மாற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது.

இ.பி.எஃப். சந்தாதாரர்களாக உள்ள 55 வயதுக்கும் குறைவான 1 கோடியே
30 லட்சத்து 10 ஆயிரம் பேரில் 24.3 விழுக்காட்டினர் அல்லது 31 லட்சத்து
60 ஆயிரம் பேர் 781 கோடி வெள்ளியை நெகிழ்வு கணக்கிலிருந்து
மீட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 11ஆம் தேதி வரை இ.பி.எஃப். பங்களிப்பாளர்களின் நெகிழ்வு
கணக்கு புதுப்பிப்பு நிலை குறித்து ஜெர்லுன் உறுப்பின்ர அப்துல் கனி
அகமது எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சு இந்த பதிலை வழங்கியுள்ளது.

மாறிவரும் வேலை வாய்ப்புச் சூழல், வயதான மக்கள் தொகை, இ.பி.எஃப்.
உறுப்பினர்களின் வாழ்க்கைச் சூலுக்கு ஏற்ப மாறி வரும் தேவைகளை
சமாளிப்பதற்கான ஆக்ககரமான நடவடிக்கையாக இந்த திட்டம்
விளங்குகிறது என்று அது குறிப்பிட்டது.

உறுப்பினர்களின் ஓய்வு காலச் சேமிப்பை அதிகரிப்பதற்கும் வயது
முதிர்ந்த காலத்தில் அவர்கள் வறுமையில் சுழல்வதைத் தவிர்ப்பதற்கும்
ஏதுவாக நிறைவான வருமானத்தை தொடர்ந்து ஈட்டித் தரும் கடப்பாட்டை
இ.பி.எஃப். கொண்டுள்து.

உறுப்பினர்களின் நிதிச் சேமிப்பு அவர்களின் பங்களிப்பு மற்றும் பண மீட்பு
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான
பங்களிப்பும் நியாயமான காரணங்களுக்காகச் செய்யப்படும் பண மீட்பும் உறுப்பினர்கள் ஓய்வுகாலச் சேமிப்பை சமநிலையாக வைத்திருக்க உதவும்
என நிதியமைச்சு குறிப்பிட்டது.


Pengarang :