NATIONAL

பூடி மடாணி முறையின் உருவாக்கத்திற்கு நிதிச் செலவு இல்லை – மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 15 – மடாணி மானிய உதவி (பூடி மடாணி) முறையின் உருவாக்கத்திற்கு  எந்த செலவும் ஏற்படவில்லை என்று துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

வெளி ஆலோசகர்கள் இல்லாமல் அரசு அதிகாரிகளின்  நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பூடி மடாணி செயலி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆகவே, தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதால் இதில் வெளிப்படையான  டெண்டர்  பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று  அவர் குறிப்பிட்டார்.

மக்களவையில் இன்று கேள்வி பதில் அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பூடி மடாணி முறையை  உருவாக்குவதற்கான செலவு, அதன் கொள்முதல் முறை மற்றும் அது வெளிப்படையான  டெண்டர் முறையின் மூலம் செய்யப்பட்டதா என்பது குறித்து  என லிபரான்  உறுப்பினர் டத்தோ சுஹைமி நசீர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

உதவி  தேவைப்படும் தரப்பினருக்கு  மானியங்களை மறுஇலக்கிடுவது,  உயரும் வாழ்க்கைச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் டீசல் வாகன உரிமையாளர்களுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை  இந்த பூடி மடாணித திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று லிம் விளக்கினார்.

ஏற்கனவே அமலில்  உள்ள அனைத்து தொடர்புடைய அரசாங்க தரவுத் தளங்களையும் இலக்கு டீசல் மானியம் பயன்படுத்தும் எனவும் அவர் சொன்னார்.

பூடி மடாணி மூலம் பெறப்படும் எந்த கூடுதல் தகவலும் மத்திய தரவுத்தள மையத்தில் (பாடு) ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :