ஷா ஆலம், ஜூலை 16- மாநில அரசின் ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் நான்கு இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) மேற்கொள்ளப்படும் இந்த விற்பனை கம்போங் செராஸ் பாரு, பாலாய் ராயா புக்கிட் சி (பாண்டான் இண்டா தொகுதி), தஞ்சோங் சிப்பாட் தேசியப் பள்ளி கார் நிறுத்துமிடம் (தஞ்சோங் சிப்பாட் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.
மேலும், ஜாலான் சுங்கை காப்பிஸ் 27/ 71, டேவான் எம்.பி.எஸ்.ஏ. பூலாய், (கோத்தா கெமுனிங்), சூராவ் அனுவார் பண்டார் புத்ரி ( சுங்கை காண்டீஸ் தொகுதி)
ஆகிய இடங்களிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் செகி ஃப்ரெஷ் பேரங்காடியுடன் இணைந்து நடத்தப்படும் மலிவு விற்பனை நீங்கலாக இவ்வாண்டு 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் வழி மற்றும் விற்பனைச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://linktr.ee/myPKPS