SELANGOR

பாலர் பள்ளி கட்டண உதவித் திட்டத்திற்கு பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூலை 16-  பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகையாக மாதம் 50 வெள்ளி வழங்க வகை செய்யும் ஸ்கிம் பந்துவான் தடிக்கா (துனாஸ்) திட்டத்திற்கு நேற்று தொடங்கி விண்ணப்பம் செய்யலாம்.

அந்த கட்டணத் தொகை மாநிலம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற 1,030 பதிவு பெற்ற பாலர் பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று யாவாஸ் எனப்படும் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் அறவாரியம்  கூறியது.

துனாஸ் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஜூலை 15ஆம் தேதி திறக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பாலர் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 50 வெள்ளி கல்விக் கட்டணமாக வழங்கப்படும் என்று அது தனது முகநூல் பதிவில் கூறியது.

இந்தத் தொகை ரொக்கமாக வழங்கப்படாது. மாறாக. சம்பந்தப்பட்ட பாலர் பள்ளிகளுக்கு நேரயாக அனுப்படும் என அந்த அறவாரியம் குறிப்பிட்டது.

பதிவு பெற்ற பாலர் பள்ளிகளின் பட்டியலை  https://tunasv2.yawas.my/admin/list_tadika.php  எனும் எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
மேலும்,  http://tunas.yawas.my/ என்ற இணைப்பின் மூலம் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த துனாஸ் திட்டம்  கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை 21,236 பெற்றோர்கள் பயனடைந்துள்ளனர்.


Pengarang :