ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

ஷா ஆலம், ஜூலை 17: இன்று மாலை 4 மணி வரை உலு லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இதே வானிலைதான் கோலாலம்பூர், பெர்லிஸ், கெடா, கிளந்தான், பகாங், நெகிரி செம்பிலான், திரங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :