கோலாலம்பூர், ஜூலை 17 – நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் 143 வது மந்திரி புசார் மற்றும் முதல் அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, குறிப்பாகப் பொருளாதார மேம்பாடு மற்றும் மக்களின் நல்வாழ்வு தொடர்பான பல விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன என முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஜூகி அலி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

“மேலும், 2005 இல் நிறுவப்பட்ட “AKRAB“ இன் பங்கு அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் அபிலாஷைகளை தெரிவிப்பதில், குறிப்பாக மலேசியா மடாணி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதே இச்சந்திப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா