MEDIA STATEMENTNATIONAL

புகைப்பிடித்த குற்றத்திற்கு  கடந்த மாதம் 5,951 குற்றப் பதிவுகள் வெளியீடு

புத்ராஜெயா, ஜூலை 20 – தடை செய்யப்பட்ட  இடங்களில் புகைப்பிடித்த குற்றங்களுக்காக கடந்த  ஜூன் மாதம் 14 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 5,951 குற்றப் பதிவுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டதாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு புகையிலை தயாரிப்பு கட்டுப்பாட்டு விதிமுறை  அமலாக்கத்தின் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட   25,924 வளாகங்களில்  மொத்தம் 13,163 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர் சொன்னார்.

இதனிடையே, டிங்கி காய்ச்சலைத் தடுப்பதற்கான  1975ஆம் ஆண்டு  நோய் பரப்பும் பூச்சிகள் அழிப்புச் சட்டத்தின்  அமலாக்கம் குறித்து கருத்துரைத்த அவர், இத்தகையக் குற்றங்கள் தொடர்பில்  16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 3,218 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்றார்.

ஒவ்வொரு குற்றப்பதிவும்  சராசரியாக 500 அபராதத் தொகையைக் கொண்டிருத்தன.
இதுதவிர, 606 சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவற்றில் 64 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு  112,280 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த மாதம் 6,824 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் 1983ஆம் ஆண்டு   உணவுச் சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் 189 வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டதாகவும் டாக்டர் ராட்ஸி மேலும் கூறினார்.


Pengarang :