MEDIA STATEMENT

நுர் ஃபாரா படுகொலை- சந்தேகப் பேர்வழி மீதான தடுப்புக் காவல் ஏழு நாட்களுக்கு நீட்டிப்பு

கோல குபு பாரு, ஜூலை 22- சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி
பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவியான நுர் ஃபாரா  கார்தினி அப்துல்லா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள   சந்தேகப் பேர்வழி க்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஏழு நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோல குபு பாரு நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்பித்த
விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நுருள் மர்டியா முகமது
ரெட்ஸா, சந்தேகப் பேர்வழியின் தடுப்புக் காவலை நாளை தொடங்கி   வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கினார்.

ஆரஞ்சு நிற லாக்கப் உடையணிந்த அந்த 26 வயது சந்தேகப் பேர்வழி  இன்று காலை 9.04 மணி அளவில் போலீஸ் வாகனத்தில் நீதிமன்றம்  கொண்டு வரப்பட்டார்.

தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்  விசாரணைக்கு உதவுவதற்காக அந்த ஆடவர் ஏற்கனவே ஏழு   நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

நுர் ஃபாராவின் உடல் கடந்த ஜூலை 15ஆம் தேதி மாலை 6.00
மணியளவில் உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள
செம்பனைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பெர்னாமா முன்னதாக  செய்தி வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து லான்ஸ் கார்ப்ரல் அந்தஸ்து கொண்ட போலீஸ்காரர்    ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டார்.

Pengarang :