HEALTHSELANGOR

கடந்த வாரம் 2,690 டிங்கி சம்பவங்கள் பதிவு- நால்வர் உயிரிழப்பு

புத்ராஜெயா, ஜூலை 28- இம்மாதம்  14 முதல் 20 வரையிலான 29வது தொற்றுநோயியல் வாரத்தில்  மொத்தம் 317 புதிய டிங்கி சம்பவங்கள் பதிவாகின. இக்காலக்கட்டத்தில் இந்நோயினால் நால்வர் உயிரிழந்தனர்.

கடந்த  28வது நோய்த் தொற்று வாரத்தில்  2,373ஆக இருந்த டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை  29வது வாரத்தில்  2,690  பேராக உயர்வை கண்டு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 பேராக அதிகரித்தது என்று  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

28வது நோய்த் தொற்று வாரத்தில் 100ஆக இருந்த நோய்த் தொற்று அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை கடந்த வாரம்  94ஆகக் குறைந்துள்ளது.
சிலாங்கூரில் மொத்தம்  71 இடங்களும்  பேராக்கில் 6 இடங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத்தில் ஆறு இடங்களும் , நெகிரி செம்பிலான் மற்றும் கெடாவில் தலா நான்கு இடங்களும்   சபா மற்றும்  கிளந்தானில் தலா  ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளன என அவர் சொன்னார்.

சிக்குன்குனியா  நோயைப் பொறுத்தவரை 29 நோய்த் தொற்று வாரத்தில்  நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்று வரை பதிவான சிக்குன்குனியா சம்வங்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆகும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.


Pengarang :