NATIONAL

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர் சத்தியாவுக்கு பிரதமர் நிதியுதவி

கோலாலம்பூர், ஜூலை 29 – பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின்
பிரபல நகைச்சுவைக் கலைஞரான சத்தியா பெரியசாமிக்குப் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சத்தியா என பரவலாக அறியப்படும் அந்த மூத்த கலைஞரை அவரது
இல்லத்தில் அண்மையில் சந்தித்த பிரதமரின் அரசியல் செயலாளர்
அகமது ஃபர்ஹான் பவுஸி இந்த நிதியுதவியை வழங்கினார். இத்தகவலை
பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சித் தொடரான பி மாய் பி மாய் தாங் து மூலம்
பிரசித்தி பெற்றவரான சத்தியா இச்சந்திப்பின் போது புன்னகையுடன்
காணப்பட்டதோடு தனது கலைத் துறை தொடர்பான விஷயங்களையும்
பகிர்ந்து கொண்டதாக என தம்மிடம் கூறப்பட்டது என்று பிரதமர் அந்த
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுவதோடு
அவரின் உடல் நலமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியுள்ளது
என்று அவர் தெரிவித்தார்.

சத்தியா விரைவில் குணமடைந்து நாட்டின் கலைத்துறைக்கு தொடர்ந்து
சேவையாற்ற தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக அன்வார் கூறினார்.

அறுபது வயதான சத்தியா அண்மையில் பக்கவாதத்திற்கு இலக்கானார்.
வீட்டில் காலைச் சிற்றுண்டி உட்கொண்டிருந்த போது கை, கால்கள்
திடீரென மரத்துப் போனதைத தொடர்ந்து அவர் சிகிச்சைச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Pengarang :