SELANGOR

புக்கிங் காசிங் தொகுதி ஏற்பாட்டில் 50 பேருக்கு முதலுவி சிகிச்சைப் பயிற்சி

ஷா ஆலம், ஜூலை 19- புக்கிட் காசிங் தொகுதி சேவை மையத்தின்
ஏற்பாட்டில் இங்குள்ள காசிங் இண்டா சமூக மண்டபத்தில் முதலுதவி
தொடர்பான சிறப்புப் பயற்சி நேற்று வழங்கப்பட்டது.

மிகவும் நெருக்கடியான தருணங்களில் மனித உயிர்களைக்
காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டு நான்காவது முறையாக
நடத்தப்படும் இந்த முதலுதவி பயிற்சியில் 50 பேர் பங்கு கொண்டதாக
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

சி.பி.ஆர். எனப்படும சுவாச முதலுதவி மற்றும் பொது இடங்களில்
மாரடைப்பினால் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி வழங்க உதவும்
ஏ.இ.டி. எனப்படும் தானியங்கி வெளிப்புற டிரிபிலேட்டர் இயந்திரத்தை
பயன்படுத்துவது ஆகியவை குறித்து இந்த பயிற்சியில் தெளிவாக
விளக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் நிலைதடுமாறி விழுந்து மூச்சுப் பேச்சின்றி
கிடக்கும் போது அவர்களுக்கு உடனடி முதலுதவி வழங்க வேண்டியதன்
அவசியம் கருதி இந்த பயிற்சியை நாங்கள் வழங்கினோம் என்று அவர்
சொன்னார்.

இத்தகைய அவசரகால உதவியின் மூலம் ஆம்புலன்ஸ் அல்லது
மருத்துவ நிபுணர்கள் வருவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை
ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என இந்நிகழ்வில் செய்தியாளர்களைச்
சந்தித்த போது அவர் தெரிவித்தார்.

இந்த ஏ.இ.டி. கருவிகள் மாவட்டத்தின் பொது இடங்களில்
கிடைப்பதற்குரிய வசதியை ஊராட்சி மன்றங்கள் குறிப்பாகப் பெட்டாலிங்
ஜெயா மாநகர் மன்றம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தித் தரும்
எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திடீரெ இருதயம் செயலிழந்தவர்கள் அல்லது சுயநினைவை
இழந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த திட்டம் பெரிதும் துணை
புரியும் என்றார் அவர்.


Pengarang :