SELANGOR

கம்போங் துங்கு தொகுதியில் இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம்

ஷா ஆலம், ஜூலை 30: கம்போங் துங்கு தொகுதியில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதார பரிசோதனைத் திட்டம் 3 ஆகஸ்ட் 2024 நடைபெறும்.

இந்நிகழ்வு காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை எம்பிபிஜே SS3 பல்நோக்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

இதயம், சிறுநீரகம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள்
மற்றும் பற்கள் போன்ற சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இத்திட்டத்தில்
பங்கேற்குமாறு டோனி லியோங் சீ பொதுமக்களை அழைக்கிறார்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

”செலங்காவில் பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600
என்ற எண்ணில் “Selcare“ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில்
தெரிவிக்கப்பட்டது.


Pengarang :