பாரிஸ், ஜூலை 30: பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 3 வது நாளான நேற்று ஜப்பான், கொரியா , பிரிட்டன் மற்றும் உபசரனை நாடான பிரான்ஸ் ஆகியவை தலா 2 தங்கப் பதக்கங்களை வென்று பட்டியலில் முன்னேறியுள்ளன. குறிப்பாக ஆசிய நாடுகளான ஜப்பான், கொரியாவும் சிறந்த போட்டிகளை வழங்கியுள்ளது. மலேசியர்கள் வழக்கம் போல் பூப்பந்து விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கங்களை எதிர்பார்க்கின்றனர். இன்று நமது பூப்பந்து விளையாட்டாளர் களிடமிருந்து நல்ல செய்திக்கு காத்திருக்கின்றனர்.