NATIONAL

எம்.ஆர்.டி நிலையத்திற்கான நடைபாதைகள் பயனர்களின் வசதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது – எம்பிபிஜே

ஷா ஆலம், ஜூலை 30: ஜூலை 1 முதல் ஃபிலியோ டாமன்சாரா மாஸ் டிரான்சிட் (எம்.ஆர்.டி) நிலையத்தில் உள்ள நடைபாதையை பயனர்களின் வசதியாகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) மேம்படுத்தியுள்ளது.

மேம்படுத்தும் பணியில் செக்‌ஷன் 16யில் உள்ள ஜாலான் 16/11 மற்றும் ஜாலான் 16/15 சாலைகளும் அடங்கும். இந்த மேம்பாட்டு பணி நவம்பர் 18ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதன் மேயர் முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

“பயனர்கள் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பாளர்கள் பொது போக்குவரத்து சேவைகளை வசதியாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நேற்று எம்பிபிஜே மாதாந்திர கூட்டத்தில் பேசிய முகமட் ஜாஹ்ரி, பெட்டாலிங் ஜெயாவை ‘முதல் மற்றும் கடைசி மைல் முன்னேற்றம்’ பகுதியாக மாற்ற பெட்டாலிங் ஜெயா உள்ளூர் திட்டம் 1 மற்றும் 2 (2017) இன் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

“இந்தத் திட்டம் 25 நிலையங்களைக் கண்டறிந்துள்ளது. அவை போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியின் (TOD) கூறுகளை உள்ளடக்கியுள்ளன.

“இந்த எண்ணிக்கையில், மொத்தம் 20 நிலையங்கள் ஏற்கனவே உள்ள நிலையங்களாகும், மற்ற ஐந்து நிலையங்கள் கட்டுமான கட்டத்தில் உள்ள புதிய எம்.ஆர்.டி நிலையங்களுக்கான வழித்தடங்களாகும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :