பாரிஸ், ஜூலை 31 பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 4வது நாளான நேற்று பிரிட்டன் மேலும் 2 தங்கப்பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முன்னேறிய வேளையில் , ஜப்பான் , சீனா, அமெரிக்கா போன்ற விளையாட்டு ஜாம்பவான்கள் தலா 1 தங்கப்பதக்கத்தை மட்டும் பெற முடிந்தது.
மலேசியர்கள் பொறுத்தமட்டில் நேற்று ஒரு மகத்தான நாள் என்றே கூற வேண்டும், பேர்லி தான் – மு.தீனா ஜோடி 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பூப்பந்து விளையாட்டுக்கான குழு நிலை இறுதி ஆட்டத்தில் உலகின் ஒன்பதாம் நிலை பூப்பந்து இரட்டையர்களான இந்தோனேசியாவின் அப்ரியானி ரஹாயு-சித்தி ஃபாடியா சில்வா ராமதாந்தியை தங்களின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தோற்கடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.