ANTARABANGSASUKANKINI

பாரிஸ் ஒலிம்பிக்- 5வது நாளில் சீனாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

பாரிஸ், ஆகஸ்ட் 1 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம்  தொடர்கிறது. 5 வது நாளான நேற்று  சீனா மேலும் 3 தங்கம் 1 வெள்ளி 1 வெண்கலப் பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் முன்னேறிய வேளையில், போட்டி உபசரணை நாடான பிரான்ஸ் சலைக்காத போட்டியை வழங்கி வருகிறது. அது நேற்று 3 தங்கம் 2 வெள்ளி,  5 வெங்கலப் பதக்கங்களை  வென்று  பதக்க பட்டியலில் 2 வது இடத்தில் இருப்பதுடன் நேற்றைய பொழுது  அதிக பதக்கங்களை வென்ற நாடாகவும் விளங்குகிறது. நேற்றைய விளையாட்டின் இறுதியில்  ஜப்பான் பதக்கப்படியலில் 3 வது இடத்தை பிடித்த்துடன் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதகத்தையும் வெற்றிக்கண்டது.

மலேசியர்கள் இன்று பூப்பந்து விளையாட்டில் இரண்டு கால் இறுதி போட்டிகள் சந்திக்கின்றனர் மலேசியாவின் பேர்லி தான் – மு.தீனா ஜோடி  தென் கொரியாவின் 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சூ இயோங்- ஹி யோங் ஜோடியுடன் மோதும் வேளையில்   கலப்பு இரட்டையர்  அணியான  சென் தொங் ஜி- தோ ஈ வே  ஜோடி  கொரியாவின்  கலப்பு இரட்டையர்களான  கிம் வான் ஹோ – ஜியோங்  நா இவ்வுடன்  விளையாடவுள்ளனர்.

இதன் பின்  அனைத்து ஆட்டங்களும்  நோக் அவுட்  முறையில் நடைபெறும் என்பதால்,  ஒவ்வொரு  ஆட்டமும் மலேசிய ஆட்டக்காரர்களுக்கு மிக முக்கியம் , அதன் வெற்றியே அடுத்த இலக்கை அடைய மிக முக்கியமானதாகும்..


Pengarang :