ARAU, 18 Nov — Petugas Suruhanjaya Pilihan Raya (SPR) membuat persiapan untuk hari pengundian bagi P.003 Arau ketika tinjauan persiapan pusat mengundi sempena Pilihan Raya Umum ke-15 di Sekolah Menengah Kebangsaan Agama Arau hari ini. — fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ANTARABANGSA

நெங்கிரி இடைத் தேர்தல்- நாளை வேட்புமனுத் தாக்கல்

குவா மூசாங், ஆக 2- நெகிரி சட்டமன்றத் தொகுதி இடைத்
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை குவா மூசாங் மாவட்ட மன்ற
அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.

காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் தங்கள் வேட்பு மனுக்களைத்
தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் போட்டியிடத் தகுதி உள்ள வேட்பாளர்களின் பெயர்களை
தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.

வேட்பு மனு தாக்குதலுக்குப் பின்னர் 14 நாட்களுக்கு தொகுதியில் பிரசாரம்
செய்வதற்கு வேட்பாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். குவா
மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத்
தொகுதிகளில் ஒன்றாக நெங்கிரி விளங்குகிறது.

இந்த தொகுதியில் வரும் ஆகஸ்டு 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும்
என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் உள்ள 14
வாக்காளர்கள் தபால் வழி வாக்குகளைச் செலுத்த முடிவெடுத்துள்ளதால்
அங்கு தொடக்க வாக்களிப்பு நடைபெறாது.

இத்தொகுதியில் 14 காவல் துறை உறுப்பினர்கள் உள்பட 320,259
வாக்காளர்கள் உள்ளனர். வேட்பு மனுத் தாக்கல் தினமான நாளை
வானிலை தெளிவாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை
கணித்துள்ளது.

கடந்த நடைபெற்ற மாநிலத் தேர்தலுக்குப் பிறகு கிளந்தானில் நடைபெறும்
முதலாவது இடைத் தேர்தலாக இது விளங்குகிறது.

அத்தொகுதி காலியானதாக கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர்
டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி
அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பெர்சத்து கட்சியின் முகமது
அஸிசி அப்துல் நாயிம் இருந்து வந்தார். அவரது கட்சி உறுப்பினர்
அந்தஸ்தை பெர்சத்து கடந்த ஜூன் 13ஆம் தேதி மீட்டுக் கொண்டதைத்
தொடர்ந்து அத்தொகுதி காலியானது.


Pengarang :