SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் தேசியக் கொடியை பறக்கவிடும் இயக்கம்

ஷா ஆலம், ஆக. 14 – தேசிய மாத இயக்கத்தை முன்னிட்டு நாட்டுப் பற்றை
விதைக்கும் விதமாக ஜாலுர் கெமிலாங் எனப்படும் தேசியக் கொடியை
பறக்கவிடும் இயக்கத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் தொடக்கியுள்ளது.

மலேசியக் கொடியை ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள வாகனங்கள், வீடுகள்,
வர்த்தக வளாகங்கள், கட்டிடங்களில் பறக்கவிடுவதை ஊக்குவிக்கும்
நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுவதாக மாநகர் மன்றம் கூறியது.

ஜாலுர் கெமிலாங் கொடியை பறக்கவிடும் இயக்கத்தின் தொடக்க
நிகழ்வை குறிக்கும் வகையில் மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் 16
ஏஜென்சிகளிடம் தேசியக் கொடியை மாநகர் மன்றம் வழங்கியது.

ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம்
தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகர் மன்றத்தின் உயர்
அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்று மாநகர் மன்றம் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.

தேசிய கொடிகள் வழங்கப்பட்ட அரசு நிறுவனங்களில் அரச மலேசிய
போலீஸ் படை, தீயணைப்பு மற்றும மீட்புத் துறை, மாநில சுகாதார
இலாகா, மலாய் மரபு மற்றும் சிலாங்கூர் பாரம்பரிய கழகம், சிலாங்கூர்
மாநில மேம்பாட்டுக் கழகம், நிர்வாகம் மற்றும் அறிவியல்
பல்கலைக்கழகம் (எம்.எஸ்.யு.) ஆகியவையும் அடங்கும்.


Pengarang :