ANTARABANGSA

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல்-ஹமாஸ் படைகள் மோதல்

ரமல்லா, ஆக. 15 – ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தாமோன் பகுதியில் பாலஸ்தீன தீவிரவாதிகளைத் தாங்கள் தாக்கியதாக இஸ்ரேல் கூறிய வேளையில் துபாஸ் நகருக்கு அருகே இஸ்ரேலிய படையினருடன் தங்களின் போராளிகள் கடுமையான போரில் ஈடுபட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியதிலிருந்து மேற்குக் கரையில் வன்முறை பெருகி வரும் நிலையில் யூத குடியேற்ற வாசிகளின் அத்துமீறல் மற்றும் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளதாக ஹமாஸ் இயக்கம் கூறியது.

துபாஸ் பகுதியில் பாலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட வேளையில் தாமோன் நகரில இஸ்ரேலியப் படைகள் நடத்திய டிரேன் தாக்குதலில் மேலும் நால்வர் பலியானதாக பாலஸ்தீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாஃபா குறிப்பிட்டது.

துபாஸ் தாக்குதலில் தங்கள் போராளிகளில் ஒருவர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸின் அல் கஸாம் பிரிகேட் ஆயுதப் பிரிவு தெரிவித்தது.

துபாஸில் ஆக்கிரமிப்புப் படையுடன் தங்கள் வீரர்கள் பல மணி நேரத்திற்குக் கடுமையான போரில் ஈடுப்பட்டதாக அது குறிப்பிட்டது.

இதனிடையே, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்கள் படைகள் தாமோன் பகுதியில் இருந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் மேற் கொண்டன என்று இஸ்ரேல் கூறியது.


Pengarang :