NATIONAL

அந்நிய நாட்டினருக்குச் சொந்தமான மூன்று கடைகளில் எம்.பி.எஸ். அதிரடிச் சோதனை

ஷா ஆலம், ஆக 16 – வங்சா பெர்மாய் வட்டாரத்தில்  வெளிநாட்டினரால் உரிமம் இன்றி நடத்தப்பட்ட மூன்று வர்த்தக வளாகங்கள் மீது செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) நேற்று அதிரடிச் சோதனை நடத்தியது.

அந்த வளாகங்களிருந்து மதுபானங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தாங்கள் பறிமுதல் செய்ததாகத்  நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவு தெரிவித்தது.

இந்த மூன்று வளாகங்களும் முறையான அனுமதியின்றி உள்ளூர் குடிமக்களின் உரிமங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டினரால் இயக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

தங்கள் சொந்த நாட்டு குடிமக்களை  இலக்காகக் கொண்டு அந்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட  உணவு மற்றும் மளிகைப் பொருட்களை மட்டுமே இந்த வளாகங்கள் விற்பனை செய்து வந்தன. அதோடு மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு கராவோக்கே மையம் மற்றும் உணவகம் ஆகியவை அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தன என்று அது ஒரு அறிக்கையில் கூறியது.

இச்சோதனையில் மதுபானங்கள், கரோவோகாகே, மற்றும் ஆடியோ, வீடியோ கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள இந்த  வளாகத்தின் வாயில் இரும்பு கேட் கொண்டு பூட்டப்பட்டிருந்ததோடு  சிசிடிவி பொருத்தப்பட்டிருந்ததால் அதன் உள்ளே நுழைவதில்  நுழைவதில் அமலாக்க அதிகாரிகள்  சிரமங்களை எதிர்கொண்டனர்.

இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கைக்கு நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர் எடி பைசல் அகமது தர்மிசி தலைமையிலான 26 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Pengarang :