NATIONAL

அரசு ஊழியர்களின் ஊதியம் டிசம்பர் 1 முதல் 15 விழுக்காடு உயர்வு காண்கிறது

ஷா ஆலம், ஆக. 16 – அரசு ஊழியர்களின் சம்பளம் 15 விழுக்காடு வரை
உயர்வு காண்கிறது. நாட்டின் வரலாற்றில் அறிவிக்கப்பட்ட அதிகப்பட்ச
ஊதிய உயர்வாக இது விளங்குகிறது.

இந்த சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் அறிவித்தார். இந்த ஊதிய உயர்வு
இரு கட்டங்களாக அதாவது முதல் கட்டம் டிசம்பர் 1ஆம் தேதியும்
இரண்டாம் கட்டம் அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதியும் அமலுக்கு வரும்
என்று அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பட்சம் 13 விழுக்காடு சம்பள
உயர்வு வழங்கப்படும் என்றும் என்றும் நாட்டினல் வரலாற்றில்
அதிகப்பட்ச சம்பள உயர்வாக இது விளங்கும் என்றும் பிரதமர் கடந்த மே
மாதம் 1ஆம் தேதி கூறியிருந்தார்

சம்பள உயர்வு விகிதம் வருமாறு-

1. அமலாக்கத் தரப்பு, நிர்வாகத் தரப்பு மற்றும் நிபுணத்துவ தரப்பினரை
உள்ளடக்கிய அதிகாரிகளுக்கு 15 விழுக்காடு சம்பள உயர்வு.- இச்சம்பள உயர்வு முதல் கட்டத்தில் எட்டு விழுக்காடாகாவும் இரண்டாம்
கட்டத்தில் ஏழு விழுக்காடாகவும் இருக்கும்

2. உயர்நிலை நிர்வாகப் பிரிவினரை உள்ளடக்கிய அதிகாரிகளுக்கு ஏழு
விழுக்காடு சம்பள உயர்வு- முதல் கட்டத்தில் நான்கு விழுக்காடாகவும் இரண்டாம் கட்டத்தில்
மூன்று விழுக்காடாகவும் இந்த சம்பள உயர்வு இருக்கும்.


Pengarang :