MEDIA STATEMENTNATIONAL

கிளந்தான் நெங்கிரி மாநில சட்டமன்றத்தை  பெரும் பெரும்பான்மையுடன் மீண்டும் கைப்பற்றியது  பிஎன்

ஷா ஆலம், 17 ஆகஸ்ட்: நெங்கிரி மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் அத் தொகுதியை  (பிஆர்கே) பாரிசான் நேசனல் (பிஎன்) வெற்றி பெற்றதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரப் வாஜ்டி டிசுக்கி தெரிவித்தார்.

பிஎன் வேட்பாளர் முகமட் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி 9,113 வாக்குகளைப் பெற்று 3,372 ஓட்டுகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார், மேலும் பெரிக்காத்தான் நேஷனல் பிரதிநிதித்துவப்படுத்திய பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் ரிஸ்வாடி இஸ்மாயில் 5,741 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பது  கவனிக்கத்தக்கது

“கடந்த மாநில  பொதுத் தேர்தலில் பிஎன் 810 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அந்த  தொகுதியை, இந்த முறை 3,372 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது,” என்று அவர் தனது பேஸ்புக்கில் இன்றிரவு நேரலையாக ஒளிபரப்பப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

நெங்கிரி மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முகமது அஸ்மாவிக்கும் முகமது ரிஸ்வாடிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

ஜூன் 13 அன்று அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்  முகமட் அசிசி அபு நைம் பெர்சாத்து உறுப்பினர் அந்தஸ்தை   நீக்கிய  காரணத்தால்  ஜூன் 19 அன்று கிளந்தான் மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா அறிவித்த காலியான இருக்கையைத் தொடர்ந்து இந்த  தேர்தல் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 15 வது கிளந்தான் மாநிலத் தேர்தலில் முகமட் அசிசி 810 வாக்குகள் பெரும்பான்மையுடன் பிஎன் வேட்பாளர் அப் அஜிஸ் யூசோப்பை தோற்கடித்தார்.


Pengarang :