NATIONAL

பாலஸ்தீனர்ளை அழைத்து வர இரண்டாவது விமானப் பயணம் மேற்கொள்ளப் படாது- தற்காப்பு அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், ஆக 22- மலேசியாவிற்கு மேலும் பாலஸ்தீனர்களை அழைத்து வரும் இரண்டாவது  பயணம்  எதுவும் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

சுமார் 70,000 பாலஸ்தீனர்கள் எகிப்தில் நுழைந்து தங்கியிருப்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. ஆயினும்,  அவர்கள் அனைவரையும் நம் நாடு ஆதரிக்க முடியாது என்பதையு புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எங்களால் முடிந்தவரை உதவுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று மாலை அம்னோ இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பொதுக்கூட்டங்களை ஏக காலத்தில் தொடக்கி வைத்தப் பின்னர்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

இதற்கிடையில், பாலஸ்தீனர்களுக்கு   மருத்துவ உதவிகளை வழங்கவும் பின்னர் அனைவரையும்  அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அமைச்சு உதவும் என்று  வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமது ஹசான் சொன்னார்.

நான் பாலஸ்தீனத் தலைவர்களுடன்  விவாதித்தேன். அவர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை.  தங்கள் தாய் நாட்டில் இறக்கவும் அவர்கள்  தயாராக உள்ளனர்.

அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புகிறார்களே தவிர கட்டாயமாக வெளியேற்றப் படுவதை விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக, தனது மாநாட்டின் தொடக்க உரையில், இஸ்ரேலிய ஸியோனிச ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிரான பாலஸ்தீனப் போராட்டத்திற்கு மலேசியா தன்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்யும் அம்னோ துணைத் தலைவரான முகமது என்று வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அட்டூழியங்களைச் செய்வதைத் தடுக்க உலகின் பெரும் வல்லரசுகள் மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


Pengarang :