MEDIA STATEMENTNATIONAL

மஸ்ஜிட் இந்தியாவில் மண் அமிழ்வு- பிரதமர் அனுதாபம், இந்திய மாதுவை தேடும் பணியைத் தொடர வாக்குறுதி

கோலாலம்பூர், ஆக. 25- இங்குள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நேற்று முன்தினம் மண் அமிழ்வில் சிக்கி காணாமல் போன இந்திய மாது ஒருவரை தேடி மீட்கும் பணி தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதியளித்துள்ளார்.

விஜயலட்சுமி (வயது 48) என்ற அந்த மாதுவுக்கு ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பில் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்ட அவர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்திக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை தாம் பணித்துள்ளதாக க் கூறினார்.

இச்சம்பவத்திற்காக அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்திக்கும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை நான் பணித்துள்ளேன். அதே சமயம் தேடி மீட்கும் பணிகளைத் தொடரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கூட்டரசு பிரதேச பள்ளிவாசலில் இன்று அல்-அக்ஸா மறும் பாலஸ்தீனம் மீதான அகில மலேசிய பள்ளிவாசல் மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை 8.22 மணியளவில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மலாயன் மேன்சன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அம்மாது திடீரென ஏற்பட்ட மண அமிழ்வில் சிக்கி சுமார் 8 மீட்டர் ஆழமுள்ள குழியில் விழுந்தார்.

மலேசியாவில் சுற்றுப்பயணிகளாக கடந்த இரு மாதங்களாக தங்கியிருந்த அம்மாதுவும் அவரின் குடும்பத்தினரும் நேற்று தாயகம் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.

 


Pengarang :