NATIONAL

சுங்கை தெக்காலா சுற்றுச்சூழல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 26: லெப்டோஸ்பிரோசிஸ் அல்லது எலி சிறுநீர் கிருமி உள்ளதாகக் கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து செமினியில் உள்ள சுங்கை தெக்காலா சுற்றுச்சூழல் பூங்கா இன்று முதல் வருகையாளர்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் வனத்துறையின் முகநூலில் பகிரப்பட்ட விளக்கப்படம் மூலம் ஆகஸ்ட் 30 வரை சுங்கை தெக்காலா சுற்றுச்சூழல் பூங்கா மூடுவதற்கான உத்தரவை சிலாங்கூர் மாநில வனத்துறை இயக்குனர் அசார் அகமட் வெளியிட்டார்.

“எதிர்வரும் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை அனைத்து வருகையாளர்களுக்கும் சுங்கை தெக்காலா சுற்றுச்சூழல் பூங்காவை தற்காலிகமாக மூடும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. “தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்,” என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Pengarang :