SELANGORYB ACTIVITIES

மக்களின் சுமையை குறைக்க இலவச பெட்ரோல்

ஷா ஆலாம் – நிலையற்ற பெட்ரோல் விலையால் பெரும் சுமையினை எதிர்நோக்கி வரும் மக்களின் சுமையினை குறைப்பதற்காக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் இலவச பெட்ரோல் சேவையினை ஏற்படுத்தினார்.

இத்திட்டத்திற்காக அதன் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் வெ.500ஐ ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிலையற்ற பெட்ரோல் விலையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் வேளையில் இந்நடவடிக்கை அவர்களின் சுமையை ஓராளவும் குறைக்கும் என நம்புவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பெட்ரோலுக்கான மானியத்தை மத்திய அரசி மீட்டுக் கொண்டதால் நாட்டில் பெட்ரோல் விலையும் நிலையற்ற சூழலை எட்டியுள்ளது.இஃது மக்களுக்கு பெரும் சுமையானது என நினைவுறுத்திய அவர் இதனால் அடித்தட்டு மக்களின் பொருளாதார சூழலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது என்றார்.

இந்த இலவச பெட்ரோல் சேவையின் மூலம் சுமார் 110 மோட்டார் சைகிள் ஓட்டிகள் நன்மை அடைந்திருப்பதாகவும் இஃது அரசியல் நோக்கம் கொண்ட ஒன்றல்ல என்றார்.மாறாய்,மக்களின் மனகுமுறலையும் அவர்களின் கருத்தையும் நேரில் கண்டறிய வழிகோலும் வாய்ப்பு எனவும் அவர் கூறினார்.

இந்த இலவச பெட்ரோல் சேவை பெட்டாலின் ஜெயா SS3இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Pengarang :