(FILES) This file photo taken on May 4, 2001 shows an immigration officer (L) escorting Kim Jong-Nam, son of North Korean leader Kim Jong-Il, getting off a bus to board an ANA905 (All Nippon Airways) airplane at Narita airport near Tokyo. Kim Jong-Nam, the half-brother of North Korean leader Kim Jong-Un has been assassinated in Malaysia, South Korea’s Yonhap news agency said on February 14, 2017. / AFP PHOTO / TOSHIFUMI KITAMURA
NATIONAL

வடகொரியா அதிபரின் தம்பியின் கொலை வழக்கு விசாரணை

சிப்பாங் – வடகொரியா அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம்யின் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு அந்நிய நாட்டு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சிப்பாங் நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது.

சந்தேக நபர்களுக்கு எதிரான வாதங்களை அரசு தரப்பு வழக்கறிஞர்களும் அவர்களை தற்காக்கும் முயற்சியில் சந்தேக நபர்களின் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் முன் வைத்தனர்.

வழக்கத்திற்கு மாறாக நீதிமன்றம் பெரும் பாதுக்காப்பு சூழ்ந்திருந்தது.உள்ளூர்  மற்றும் வெளிநாடு நிருபர்களும் குவிந்திருந்த நிலையில் நிருபர்களுக்கும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக,கைபேசி,மின்னியல் குரல் பதிவு உட்பட சில பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதர் கிம் ஜோங் நாம்_யை கோலாலம்பூர் 2வது அனைத்துலக  விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி  கொலை செய்யப்பட்டார்.அக்கொலை தொடர்பில் இந்தோனேசியாவை சார்ந்த 25 வயது சித்தி ஐஸ்சாவும் வியட்னாம் நாட்டை சார்ந்த 28 வயது டோஹன் தீ வுவாங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


Pengarang :