KUALA LUMPUR, 2 April 2016. Himpunan Bantah GST anjuran Parti Amanah di sekitar Kuala Lumpur. Foto: SHARIFUDIN ABDUL RAHIM
NATIONAL

ஜிஎஸ்டி வரியை மறுஆய்வு செய்ய வேண்டும்

ஷா ஆலம், 30 ஏப்ரல்:

கடந்த 1 ஏப்ரல் 2015-இருந்து அமலாக்கத்தில் இருக்கும் பொருட்கள் சேவை வரியை  (ஜிஎஸ்டி) மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பபடுகிறது.

பினாங்கு மாநில முப்தி டாக்டர் வான் சலீம் வான் முகமட் நோர் பேசுகையில், ஒரு முன்மாதிரி அரசாங்கம் மக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் மிக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் விதியையும் சீர்தூக்கி பார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

” சிறந்த மக்கள் நலன் சார்ந்த  அரசாங்கம் மக்களின் குறைகளை கேட்க வேண்டும் எனவும்  அவர்களின் பிரச்சனைகளைக் களைய முயற்சிகள்  எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலாக்கம் மக்கள் நீதிக்கு ஏற்ப நாட்டின் பொது நலத்திற்காக  இருக்க வேண்டும். அப்போது தான்  ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்,” என்று கூறினார்


Pengarang :