NATIONAL

கூடுதல் வாக்காளர் பட்டியல் இல்லாமல் தேர்தல் முறைகேடுகளை கண்டு பிடிக்க முடியாது

பெட்டாலிங் ஜெயா, மே 3:

தேர்தல் ஆணையத்தின் கால் ஆண்டின் கூடுதல் வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, தேர்தல் முறைகேடுகளை கண்டு பிடிக்க இயலாமல் போகும்.

கெஅடிலான் கட்சி யின் உதவித் தலைவரும் தேர்தல் இயக்குனருமான நூருல் இஸா அன்வர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையானது எதிர் வரும் பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை தவறான முறையில் கையாளும் நிலை ஏற்படுத்தி உள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின்  அரசியலமைப்பு சட்டத்தில் 10 (1)(a)-வது விதியின் படி நாட்டின் குடிமக்கள் அனைவரும் தகவல் தெரிவதற்கு  உரிமை உண்டு என்று விவரித்தார்.

”   தேர்தல் ஆணையம் சட்ட வரம்புகளை மீறுவதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும்  அதிகாரிகளுக்கு கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத்தை தடை செய்யப்பட்டது,” என்று கூறினார்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் மேலும் விவரிக்கையில், தேர்தல் முறைகேடுகள் தொடர்ந்து மக்கள் விரோத அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலன் பாதிக்கபடும் என்று கூறினார்.

izzah


Pengarang :