NATIONAL

பொதுச் சேவை இலாகாவின் உபகாரச் சம்பளத்தை குறைக்கும் மிரட்டல் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும்

ஷா ஆலம், மே 3:

பொதுச் சேவை இலாகாவின் பல்கலைக் கழக மாணவர்களின் உட்காரச் சம்பளத்தை குறைக்கும்  என்ற மிரட்டல்கள் அதன்  அடக்குமுறை, மாணவர்களின் தன்னார்வ மற்றும் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் நிலையை உருவாக்கும்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் கூறுகையில், உட்காரச் சம்பளம் நாட்டின் குடிமக்களிடம் இருந்து வசூல் ஆகும் வரியின் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இது தகுதி பெற்ற மாணவர்களின் உரிமை  என்றும் பொதுச் சேவை இலாகாவின் நடவடிக்கை  அவர்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவைப்பது சரியான முறையல்ல என்று விவரித்தார்.

”   பொதுச் சேவை  இலாகாவின் முடிவு பல்கலைக் கழக மற்றும் கல்லூரி சட்டத்தை பயன்படுத்தி வரும் முயற்சியை பின் தொடர்வதாகவும், இது மாணவர்களின் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும்,”  என்று விவரித்தார்.


Pengarang :