NATIONAL

ஊழல் தடுப்பு ஆணையம் 14-வது பொதுத் தேர்தலில் வென்ற ஊழல் வேட்பாளர்களை தொடர்ந்து கைது செய்யும்

ஷா ஆலம், மே 4:

ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து லஞ்ச ஊழலில் ஈடுபட்ட தலைவர்களை 14வது பொதுத் தேர்தலில் வென்றாலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் என உறுதி கூறுகிறது.

அதன் ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் விவரிக்கையில், ஊழல் தடுப்பு ஆணையம் எப்போதும் நடவடிக்கை எடுக்க தயங்கியது கிடையாது, மாறாக மக்கள் நலனை  என்றும் காக்கும் கேடயமாக விளங்கும் என்று தெரிவித்தார். ஆணையத்தின் உறுதிப்பாடு தனிநபர் நோக்கம் அல்ல மாறாக மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்.

”   எங்களுக்கு எந்த தலைவர்களோ அல்லது  அரசியல்வாதிகளோ ஆணை இடுவதில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் கண்டிப்பாக  அரசியல்வாதிகள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என அறிக்கை விடுவேன். சிலர் தங்கள் கையில் அதிகாரம் வந்ததும் ஊழலில் ஈடுபடுகிறார்கள்,” என்று எஸ்ட்ரோ அவானியிம் கூறினார்.

Datuk Dzulkifli Ahmad SPRM

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில், ஊழல் தடுப்பு ஆணையம் பல மிக முக்கியமான அரசியல்வாதிகள் மீதும் வழக்கு விசாரணை பதிவு செய்த்தது குறிப்பிடத்தக்கது என்று விவரித்தார்.

 


Pengarang :