NATIONAL

மறுமலர்ச்சி போராட்டவாதிகள் மாமன்னரிடம் அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரிக்கை மனுவை கொடுத்தனர்

கோலாலம்பூர், மே 8:

மறுமலர்ச்சி போராட்டவாதிகள் இஸ்தானா நெகாராவில் கெஅடிலான் ஆலோசகர் டத்தோ ஸ்ரீ  அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரி மேன்மை தங்கிய மாமன்னர், சுல்தான் முகமட் V -இடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் தலைவர் ஷாரி சுங்கிப் கூறுகையில், அன்வரின் விடுதலை காலத்தின் கட்டாயம், அவரின் பொறுப்புள்ள செயல்பாடுகள் உணர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களின் அடிப்படையில் மாமன்னருக்கு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”   அன்வர் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் வெளியில் இருக்கக் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சிறைவாசத்தை தேர்ந்தெடுத்தார். மக்களின் நல்வாழ்வுக்காக போராட முடிவு எடுத்தார். அன்வர் ஒரு தேசியவாதி, அவரை சிறைபிடித்து நடத்தக் கூடாது,” என்று இஸ்தானா நெகாராவில் முன் தெரிவித்தார்.

OTAI REFORMIS (9)

 

 

 

 

 

 

 

மறுமலர்ச்சி போராட்டவாதிகளோடு 19 அரசு சார்பற்ற இயக்கங்களும் கலந்து கொண்டு  அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரி ஆதரவு கொடுத்தனர். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட் மற்றும்  ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அமாடும் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை இஸ்தானா நெகாராவின் அதிகாரி, சே ஹில்மி சே மூசா பெற்றுக் கொண்டார். மனுவில் ஐக்கிய நாடுகளின் அறிக்கை மற்றும் செயலாற்றி வரும்  ஐக்கிய நாடுகள் வெளியிட்ட செய்தியான  அன்வர் ஒரு அரசியல் கைதி என்ற அம்சங்களை இணைத்து  இருப்பதாக கூறினார். ஆனால்  இஸ்தானா  அதிகாரி, இந்த கோரிக்கை மனு பற்றி  எந்த  உறுதியும் கொடுக்கவில்லை என்றார்.

OTAI REFORMIS (4)

 

 

 

 

 

இதற்கு முன்பு, அன்வர் இப்ராஹிம் விடுதலை கோரி அவர் குடும்பத்தினர் அரசு மன்னிப்பு வாரியத்திடம் கோரிக்கை மனு அளித்தது


Pengarang :