NATIONAL

எஸ்பிஆர்எம், இலஞ்ச குற்றத்திற்காக திஎன்பி நிர்வாகியை கைது செய்தது

ஷா ஆலம், மே 11:

திஎன்பி திட்ட நிர்வாகி மற்றும் மேலும்  ஒருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து நாளைக்கு காவலில் வைக்கப்படுவார்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஆர்எம் கோலாலம்பூர் வட்டாரத்தில் திஎன்பி  அலுவலகங்களை மறுசீரமைப்பு குத்தகைகளை மேற்கோள்காட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்பிஆர்எம் விண்ணப்பத்தின் பேரில் மாஜிஸ்திரேட் நிக் இஸ்பஃனி தஸ்னிம் வான் அப்துல் ரஹ்மான் இந்த காவல் நீட்டிப்பை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்னாமாவின் செய்தியின்படி இருவரில் ஆண் 55 வயதும், பெண் 51 வயதும் உள்ளவர்கள்  என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின்அஅதிகாரிகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.

மேலும் செய்தியில், திட்ட நிர்வாகியான இந்த ஆடவர் குத்தகைகளை திஎன்பியின் அதிகாரப்பூர்வ நிறுவனங்களுக்கு டெண்டர் விடாமல் நேரிடையாக குறிப்பிட்ட சிலருக்கு கொடுத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் செயலுக்கு அவர் பிஎம்டபள்யூ காரை லஞ்சமாக பெண் குத்தகையாளரிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :