NATIONAL

இஏஐசி-யின் ஆரம்பகட்ட பொது விசாரணையில் பாலமுருகனின் இறப்புக்கான காரணம் தெரிகிறது

புத்ராஜெயா, மே 15:

அமலாக்க நிறுவனங்களின் நம்பகத்தன்மை ஆணையம் (இஏஐசி) இன்று பாலமுருகனின் சிறைச்சாலை மரணத்தில் காவல்துறை அதிகாரிகளின் வரம்பு மீறிய செயலால் ஏற்பட்டதா என்ற கேள்வியோடு பொது விசாரணை நடத்துகிறது. தலைமை செயல் அதிகாரி, அமாட் ரஸிப் முகமட் சிடேக் கூறுகையில், இஏஐசி-யின் தலைவர் டத்தோ யாக்கோப் முகமட் சாம் தலைமைத் தாங்குவதோடு சில ஆணையர்களும் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த பொது விசாரணையை வழி நடத்துவார்கள் என்று விவரித்தார்.

இந்த விசாரணையில், பாலமுருகனின் குடும்பத்தினர், காவல்துறை, மலேசிய வழக்கறிஞர் மன்றம், சுவாகாம், உள்நாட்டு அமைச்சு மற்றும் சில சம்பந்தப்பட்டவர்களையும் அழைக்கும் என்று கூறினார். இஏஐசி, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி இந்த சம்பவம் நடந்துள்ளதா? மேலும் யார் இந்த மரணத்திற்கு காரணம் போன்ற கோணங்களில் விசாரிக்கப்படும் என்று விவரித்தார்.

மேலும் கூறுகையில், இது போன்ற சிறைச்சாலை மரணங்கள் நடக்காமல் இருக்க நடைமுறையில் சீரமைப்பு, வழிமுறை மாற்றம், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் ஆராய்ந்து பரிந்துரைை செய்யும் என்று கூறினார்.

பாலமுருகன், கடந்த பிப்ரவரி 7-இல் வட கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையக காவலில் வைக்கப்பட்டு, பிறகு இறக்கக் காணப்பட்டார். 55 சாட்சிகள் இந்த பொது விசாரணையில் அழைக்கப் படுவார்கள் என்றும் இன்றிலிருந்து மே 19 வரையிலும், ஜுன் 5 இருந்து 9 வரை, ஜுலை 10 இருந்து 14 வரை மற்றும் ஜுலை 24 இருந்து 28 வரையிலும் நடைபெறும் என்று விவரித்தார்.

மேலும் விவரங்களுக்கு, பொது மக்கள் இஏஐசி-இன்  இணையதளத்தில் www.eaic.gov.my அல்லது சமூக வலைதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று விவரித்தார்.


Pengarang :