SELANGOR

நிலைத்தன்மை மற்றும் வளமான நகராக பெட்டாலிங் ஜெயா உருமாற்றம்

பெட்டாலிங் ஜெயா, மே 24:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) நகர மேம்பாட்டு திட்டங்கள் குறிப்பாக உள்கட்டமைப்பு வசதி மேம்பாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகள் அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் மேயர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார். இந்த மேம்பாட்டு திட்டங்களில் மனமகிழ் பூங்கா, வீடமைப்பு பொது வசதிகள், புதிய மற்றும் சீரமைப்பு செய்யப்பட்ட சாலைகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் அடங்கும் என்றார்.

இந்த முயற்சிகள் பெட்டாலிங் ஜெயாவை நிலைத்தன்மை மற்றும் வளமான நகரமாக மாற்றம் கண்டு பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்க முடியும் என்று விவரித்தார்.

”   ‘மெர்சர்’ தரமான வாழ்க்கை குறியீட்டின் முக்கிய அம்சமாக பொது போக்குவரத்து, மனமகிழ் பூங்கா, வீடமைப்பு மற்றும் பொருளாதார மையங்கள் ஆகியவை ஆகும். இதன் அடிப்படையில், எந்த ஒரு மேம்பாட்டு திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்படும் போது ‘ஓஎஸ்சி’ கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் இதில் குறிப்பாக பொது போக்குவரத்து எடுத்துக் காட்டாக இலவச பேருந்து சேவை போன்றவை கருத்தில் கொண்டு செயல்படுவதில் கண்டிப்பாக இருக்கும். எம்பிபிஜே உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி போன்றவை மேம்படுத்தவும் உறுதி செய்கிறேன், ” என்று கூறினார்.

azizi-mbpj

 

 

 

 

 

‘மெர்சர்’ தரமான வாழ்க்கை குறியீட்டின் 2017-இன் தர வரிசையில் ஆஸ்திரியா நாட்டின் வியானா நகரம் முதல் இடத்தில் உள்ளது. மேலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் (25), கோலாலம்பூர் (86), ஜோகூர் பாரு (103), பேங்காக்  (131) மணிலா  (135) மற்றும் ஜாகர்த்தா  (143) இடங்களில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :